2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கடத்தப்பட்ட யாழ். மாணவி விடுதலை

Super User   / 2010 மே 07 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று கடத்திச் செல்லப்பட்ட யாழ் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 11 வயதான மாணவி நகுலேஸ்வரன் தேவிகா இன்று அதிகாலை அவரின் வீட்டிற்கு அருகில் விட்டுச்செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இம்மாணவி பாடசாலை செல்லும் போது மூன்று பேர் முச்சக்கர வண்டியில் வந்து கடத்திச் சென்றதாகவும், பிற்பாடு இன்று காலை தன்னை வீட்டருகில் கொண்டு வந்து விட்டதாகவும் அச்சிறுமி தெரிவிக்கின்றார்.

கடத்திச் சென்றவர்கள் தன்னுடைய கண்ணை கட்டியிருந்ததால் அவர்களை தன்னால் அடையாள காட்ட முடியாதுள்ளதாகவும் அம்மாணவி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, இந்த மாணவி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமாக யாழ் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரையில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--