2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மழையினால் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு; படகு சேவையும் ஆரம்பம்

Super User   / 2010 மே 18 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் கடும் மழை பெய்து வருவதால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக  நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற வளாகம் மற்றும் வீதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் படகுச் சேவை மூலம் வெளியில் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வில் இன்று பிரசன்னமாகியிருந்த அனைவரையும் கடற்படைக்குச் சொந்தமான 6 படகுகளின் மூலம் அங்கிருந்து வெளியே அழைத்து வர கடற்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--