2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

கடற்கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட இலங்கை மாலுமிகள் நாடு திரும்பினர்

Super User   / 2010 மே 29 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலிய கடற்கொள்ளையர்களால் பணயக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை மாலுமிகள் நாடுதிரும்பியுள்ளதாக கல்ப் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு மாதகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மாலுமிகள் 23 பேரில் 18 பேர் பாதுகாப்பாக கொழும்பு வந்து சேர்ந்தாக வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சிய சார்ஜா நகரிலிருந்து இவர்கள் வந்து சேர்ந்தனர்.ஏனையவர்கள் அங்கு தொழில்வய்ப்புக்களை பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி பர்முட வுக்குச்சொந்தமான சரக்குக்கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

மே மாதம் 11அம் திகதி இக்கப்பலிலுள்ள மாலுமிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .