Editorial / 2017 மே 31 , பி.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில், காலடிப்பாதை வலையமைப்பொன்றை நிர்மாணிக்கும் திட்டத்தின் 3ஆம் கட்ட நிர்மாண பணிகளுக்காக, இலங்கை கடற்படையினரின் உதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே, அமைச்சரவையின் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் காணப்படுகின்ற அதிக வாகன நெரிசலினை கருத்திற்கொண்டு, பாதசாரிகள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்யவேண்டிய நிலைமையினை ஏற்படுத்துவதற்காக, பிரசித்தி பெற்ற இடங்களை இணைக்கும் வகையிலான காலடிப்பாதை வலையமைப்பொன்றை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வேலைத்திட்டத்தின் முதற் கட்டத்தின் கீழ், டி.ஆர். விஜேயவர்தன மாவத்தையில் இருந்து ஒல்கொட் மாவத்தை வரையிலான பகுதியின் வேலைகள் தற்போது முடிவடைந்துள்ளன. இரண்டாம் கட்டத்தின் கீழ், ஒல்கொட் மாவத்தை கடற்கரை வீதியுடன் இணைக்கும் பணிகள் தற்போது முடிவுக்கு வரும் நிலையில் உள்ளன.
இவ்வேலைத்திட்டத்தின் 03ஆம் கட்டமானது, செபஸ்தியார் கால்வாய் ஓரமாக தொழில்நுட்பச் சந்தியிலிருந்து உயர்நீதிமன்றம் வரையிலான பாதசாரி ஒழுங்கையை அபிவிருத்தி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அது, 06 மீற்றர் (20 அடி) அகலமாவதுடன், நீளம் 1,485 மீற்றர்களாகும்.
இதற்கமைய, குறித்த பணியை, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை பயன்படுத்தி, இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்வதற்கு, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால், முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே, அமைச்சரவையின் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
48 minute ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
9 hours ago