2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

கண்டியில் புதையல் தோண்டிய நால்வர் கைது

Suganthini Ratnam   / 2010 ஜூலை 07 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி அக்குரணை நிரெல்ல என்னும் இடத்தில் புதையல் தோண்டிய 4 பேர் அலவத்துகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட மின்னுற்பத்தி இயந்திரக் கல் உடைக்கும் உபகரணம், வெடிபொருள்கள், பூஜைக்கான உபகரணங்கள் என்பவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அவ்விடத்தில் 7 பேர் புதையல் தோண்டுவதில் ஈடுபட்டிருந்ததாகவும் 3 பேர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் இன்று புதன்கிழமை கண்டி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--