2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

கண்டி, ஹந்தானை தோட்ட மக்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

Super User   / 2010 ஜூன் 06 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்து வருடங்களாக நிலுவையிலுள்ள ஊழியர் சேமலாப நிதியத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி கண்டி, ஹந்தானை தோட்ட மக்கள் சாகும்வரையான உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 10 வருடங்களாக நிலுவையிலுள்ள ஊழியர் சேமலாப நிதியம் உட்பட ஏனைய கொடுப்பனவுகளின் பெறுமதி ஆறு கோடி ரூபாவினைத் தாண்டியுள்ளது என்று குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.

கடமையினையும் புறக்கணித்து நடத்தப்பட்டு வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 150பேர் வரையில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான "ஜனவசம" எனும் இந்தத் தோட்டப்பகுதியானது, தனியார்க்கு விற்கவுள்ள நிலையிலேயே குறித்த ஊழியர் சேமலாப நிதி உட்பட கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் மேலும் சுட்டிக்காட்டினர். 

  Comments - 0

  • divakar Sunday, 06 June 2010 10:57 PM

    இந்த மக்களுக்கு நல்லதோர் முடிவினை தருவது அரசாங்கத்தின் கடமையாகும். இப்போராட்டம் வரவேற்கதக்கது. அனைவரும் ஒன்றுபட்டால் நல்வழி பிறக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--