2021 மார்ச் 04, வியாழக்கிழமை

காணி அபகரிப்பை எதிர்த்து போராட்டம்

Editorial   / 2017 ஜூலை 18 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்துக்குப்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின்  காணியை, பிரிதொரு நபர்கள் அபகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (18) காலை 9.45 மணியில் இருந்து 11 மணிவரை ஈடுபட்டனர்.

கடந்த 8 மாதங்களாக பாடசாலைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் அத்துமீறிய குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையென போராட்டத்தில் ஈடுபட்டோர் கவலை தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்கள், மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளை வழங்குவதாகவும் இது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களுக்கு அறிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தொடர்ச்சியாக குறித்த சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு, மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரெட்ண தேரரும் வருகைதந்திருந்தார்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய தேரர், இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும் 10 தினங்களுக்குள் குறித்த பாடசாலை மைதானத்துக்குள் அத்துமீறிய குடியேற்றங்களை அகற்றித்தருவதாகவும் உறுதியளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .