2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கத்திமுனையில் ரூ.15 இலட்சம் கொள்ளை

Kogilavani   / 2016 மார்ச் 04 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொடுப்பனவு ஒன்றுக்காக நிதி நிறுவனமொன்றிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட 15 இலட்சம் ரூபாய்ப் பணத்தை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், குறித்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவராலேயே மேற்படி பணம் கொடுப்பனவு ஒன்றுக்காக எடுத்துச்செல்லப்பட்டதாகவும், அவர் மீது கொள்ளையர்கள் கத்தியால் குத்திவிட்டே பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியது.

சம்பவத்தில் காயமடைந்த, நிதி நிறுவனத்தின் ஊழியர், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

நிதி நிறுவனமொன்றில் 15 இலட்சம் ரூபாய் பணத்தை மீளப்பெற்றுக்கொண்டு வாகனத்தில் திரும்பிக்கொருந்த இருவரை, கத்தியால் குத்திவிட்டு, அப்பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இன்று வெள்ளிக்கிழமை (04) ஜா- எல நகரில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே, மேற்படி இருவர் மீதும் கத்தியால் குத்திவிட்டு பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவர், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .