2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

கொம்பனித்தெருவில் பொலிஸார் மீது தாக்குதல் குறித்து தீவிர விசாரணை

Super User   / 2010 மே 09 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொம்பனித்தெரு பிரதேசத்தில் வைத்து பிரதேசவாசிகளால் பொலிஸார் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்று பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

அப்பகுதியிலுள்ள சட்ட விரோத வீடுகள் அகற்றப்பட்ட சம்பவத்துக்காக அவ்விடத்துக்கு சென்ற  போதே அவ்விருவரும் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

கொம்பனித்தெரு பிரதேசத்தில் அமைந்திருந்த சட்ட விரோத வீடுகள் நேற்று மாலை அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • xlntgson Sunday, 09 May 2010 08:25 PM

    போச்சுடா, இதற்குத்தான் அவசரகால நிலை நீடிப்போ? மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் இம்மாதிரியான நிலைமைகள் ஏற்படாவண்ணம் இராணுவத்தாலும் முடியாமல் போகும், இஸ்ரேல் ஒரு முன்னுதாரணம், வீடு தன் கண்முன்னாலேயே உடைக்கப்படுவதையும் சிறுபிள்ளைகள் கதறுவதையும் கன்னிப்பெண்கள் பயந்து அலறுவதையும் கர்ப்பிணிகள் அதிர்ச்சியடைவதையும் நோயாளிகள் மயங்கி விழுவதையும் ஊடகத்துக்கு தடை செய்தாலும் பார்த்தவர்கள் கண் குருடு அல்ல, பாதுகாப்பு அதிகாரிகளே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--