2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கரடியனாறு விவசாய பண்ணையை திறக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Menaka Mookandi   / 2010 ஜூலை 09 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 24 வருடங்களாக மூடப்பட்டிருக்கும் கரடியனாறு விவசாய பண்ணையை திறக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த பண்ணை மூடப்பட்டமையினால் அதில் பணியாற்றி வந்த சுமார் 300பேருக்கு வேலை வாய்ப்பு அற்றுப் போனதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், மீண்டும் இந்தப் பண்ணையினைத் திறப்பதன் மூலம் பலருக்கு தொழில் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த பண்ணையினைத் திறப்பதன் மூலம், கரடியனாறு, கோப்பாவெளி, புல்லுமலை, இலுப்படிச்சேனை, மரப்பாலம், உறுகாமம், மற்றும் செங்கலடி போன்ற கிராம மக்கள் நன்மையடைவதாகவும் அரியநேத்திரன் எம்.பி. மேலும் கூறியுள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--