2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

கருணாவின் கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆ​ரம்பம்

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள்  பிரதியமைச்சர்   விநாயகமூரத்தி முரளிதரன் (கருணா), முஸ்லிம் மக்களை இலக்காகக் ​கொண்டு தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான முறைப்பாடு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான, ரத்னஜீவன் ஹூல் என்பவரால் பொலிஸ் தலைமையகத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும் ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கருணா அம்மானால் வெளியிடப்பட்ட கருத்துத் தொடர்பான குரல் பதிவும் ​பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசரணைகள் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .