2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் குணமடைந்தார்

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த இலங்கைப் பெண் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளாகிய இலங்கைப் பெண் வைத்தியசாலையை விட்டு இன்று வெளியேறியுள்ளதாகவ இத்தாலியில் உள்ள மிலான் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியே அதிக அளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் 12,462 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 827 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இத்தாலியில் தனிமைப்படுத்துவதை நிராகரிக்கும் வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு 21 வருட சிறைத் தண்டணை விதிப்பதற்கு இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .