2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கொரோனோ கிருமி தொடர்பில் கடும் அவதானம்

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் வூஹான் நகரில் பரவி வரும் புதிய கொரோனோ கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளர் எவரும், இலங்கைக்கு வந்துள்ளனரா என்பது தொடர்பில் கடும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள சுகாதார பிரிவுக்கு இது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சீனாவின் வூஹான் நகரில், புதிய கொரோனா (Corona) கிருமியால் மேலும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .