2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

கொரியாவில் வீர செயல் புரிந்த இளைஞன் நாடு திரும்பினார்

Yuganthini   / 2017 ஜூலை 25 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கொரியாவில் திடீர் என ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய வயதான பெண்மணி ஒருவரைக் காப்பாற்றிய இலங்கை இளைஞன் இன்று (25) நாடு திரும்பியுள்ளார்.

இவர் இன்று காலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். ஹசலக, மினிப்பே பிரதேசத்தைச் சேர்ந்த நிமலசிரி பண்டார என்ற அந்த இளைஞன், கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி தென் கொரியாவிலுள்ள வீ​டொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய வயதான பெண்மணியைக் காப்பாற்றினார்.

இந்த விபத்தின்போது அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் அவ்விடத்தில் இருந்துள்ள போதிலும் இலங்கையைச் சேர்ந்த இந்த இளைஞன் துணிச்சலுடன் செயற்பட்டு அந்தப் பெண்மணியைக் காப்பாற்றியுள்ளார். இதனால் அந்நாட்டு அரசாங்கம் இளைஞனைப் பாராடி கௌரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .