2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Editorial   / 2020 ஜனவரி 09 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலானை, தர்மாராம பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாதோர் அங்கிருந்த மூவர்மீது கூரான ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்தேக நபர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .