Editorial / 2017 மே 28 , பி.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துக்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேரடியாக ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான ஆதாரங்களை, குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவம், 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது, கோட்டாபய ராஜபக்ஷ, தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட நபர்களின் தகவல்கள் மற்றும் குறித்த அழைப்புகள் தொடர்பில், குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில், கோட்டாபய, முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க ஊடாக, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவுக்கு வழங்கியதாகக் கூறப்படும் காகிதத் துண்டு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரங்களை விரைவில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
19 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago