2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

வீடுகள் கையளிக்கப்படாததை கண்டித்து கல்முனையில் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 ஜூன் 16 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2004 இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக  கட்டப்பட்ட வீடுகள் இதுவரையில் கையளிக்கப்படாததைக் கண்டித்து கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் தற்போது ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்று வருகிறது.

இதன் காரணமாக, அங்கு பதட்டமான சூழ்நிலை காணப்படுவதுடன், கல்முனை மாநகரசபை மற்றும்  கல்முனை பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுடன் கலந்துரையாடுவதற்காக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் ஹன்னங்கர அங்கு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .