2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மாநகர மேயர் மஷூர் மெளலானாவுக்கு நியமனக்கடிதம் கையளிப்பு

Super User   / 2010 மே 27 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர மேயராக நியமிக்கப்பட்டுள்ள மசூர் மெளலானவுக்கான நியமனக் கடிதத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி மேயர்அலுவலகத்தில் நேற்று கையளித்தார்.

இந்நிகழ்வில், பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏ.எம்.பசீர் மற்றும் கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினர் எம்.எஸ்.எம்.நிஸார் ஆகியோருக்கான நியமனக் கடிதங்களும் ஹஸன் அலியினால் கையளிக்கப்பட்டன.  

திகாமடுல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எம்.சலீம் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். 

இதேவேளை, கல்முனை மாநகர மேயர் நியமனம் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான றகீப், இன்று இடம்பெற்ற நிகழ்விலும் கடந்த செவ்வாய்க்கிழமை  மசூர் மௌலானா தலைமையில் இடம்பெற்ற மாதாந்த சபைக் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (R.A) 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--