2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கொள்ளுப்பிட்டியில் தாய்லாந்து பெண்கள் 14 பேர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டி சமுத்ர மாவத்தையில் அமைந்துள்ள, பிரபல மசாஜ் நிலையத்தில் பணியாற்றிவந்த, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 14 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின், அவசர சுற்றிவளைப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வருகைத்தந்து, சட்டவிரோதமானமுறையில் தொழில்புரிந்தனர் என்ற  குற்றச்சாட்டின் கீழ், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள், மாதமொன்றுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்துள்ளனரென, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--