2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

கொழும்பு மாநகரசபைக்கு முன்னால் பல்கலை மாணவர் இன்றும் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 மே 21 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணைந்த சுகாதார கற்கை நெறிக்கான  காலப்பகுதி நான்கு வருடங்களிலிருந்து மூன்றாக குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு மாநகரசபைக்கு முன்னால் தற்போது பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் எப்.ஆர்.சேனாநாயக்க மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் யூனியன் பிளேஸ் பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு, வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்களே இன்று கொழும்பு மாநகரசபைக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இடம்பெற்ற போது குறித்த மாணவர்கள் மீது பொலிஸார் தண்ணீர் பிரயோகம் செய்து விரட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (R.A)

  Comments - 0

  • xlntgson Saturday, 22 May 2010 07:49 PM

    படிப்பதை விட்டு, என்ன போராட்டம், இதனால் சாதிக்க முடிந்தது என்ன? அரசியல் பண்ண ஆர்வம் உள்ள மாணவர்களை தவிர மற்றவர்கள் எதிர்காலம் இருட்டாகிவிடும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--