2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

குவைத்திலுள்ள 100 பணிப்பெண்கள் இலங்கைக்கு அழைத்து வர தீர்மானம்

Super User   / 2010 மே 30 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தால் நிர்வகிக்கப்படும் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருக்கும்  சுமார் 100 பணிப்பெண்கள் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவிருப்பதாக இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

இந்த பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த பணிப்பெண்களின் விசா காலாவதியாகியுள்ளது. இந்நிலையிலேயே, இவர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படவிருப்பதாகவும் அந்தப் பணியகம் குறிப்பிட்டது.

இவர்கள் தொழில்தருனர்களினால் துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டதுடன், இவர்களுக்கான சம்பளமும் வழங்கப்படவில்லை எனவும் இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--