2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கொட்டகெத்தன கொலைகள்: சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2016 மார்ச் 29 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹவத்தை கொட்டகெத்தன பிரதேசத்தில் பெண்கள் கொலை செய்யப்பட்ட 7 சம்பவங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் எதிர்வரும்  6ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலை நீடிக்கும் உத்தரவை பெல்மடுல்லை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஜனித்தா ரோஷனி பெரேரா பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

அத்துடன், சந்தேகநபரிடம் வாக்குமூலத்தை பெறுவதற்காக மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வு  திணைக்களம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .