2021 மே 08, சனிக்கிழமை

கொண்டையாவின் சகோதரருக்கு தடுப்புக்காவல்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 வயது சிறுமதியான சேயா சந்தவமி படுகொலைச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மற்றுமொரு சந்தேகநபரை சனிக்கிழமை (03) கைது செய்த பொலிஸார், அவரை நீதிமன்ற உத்தரவின் பேரில் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர், இக்கொலையின் பிரதான சந்தேகநபரான கொண்டையா என்றழைக்கப்படும் 32 வயதான துனேஷ் பியசாந்த என்பவரின் சகோதரர் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த சந்தேகநபரை, மினுவாங்கொடை நீதவான் முன்னிலையில், ஆஜர்படுத்திய போதே, அவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதவான், அன்றையதினம் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X