Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூலை 21 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் போனோர் அலுவலகத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை, நல்லாட்சி அரசாங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள யுத்தக் குற்ற விசாரணைப் பொறிமுறையில் ஒரு பகுதி என, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலத்துக்கு வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் நாடு, இனம், யுத்தம் செய்த வீரர்கள், மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதுடன் இது தொடர்பில் மக்களுக்குப் பொறுப்பு சொல்லும் நிலை ஏற்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
நேற்றுப் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே மஹிந்த, இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 10 விடயங்கள்:
01. காணாமல் போனோர் அலுவலகம் இலங்கையின் சட்டத்தை நடைமுறைப்படுத்தவோ, நீதி நிறுவனங்கள் அமைப்பின் ஒரு பகுதியாகவோ இல்லை. இது நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சுயாதீனமான நிறுவனம்.
02. இதில், அலுவலகம் போல செயற்படப் போவது விசாரணைச் சபையாகும். இங்கு சாட்சிகள் அழைக்கப்பட்டு, விசாரணை செய்யப்படுவர். இதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பவர்களுக்கு எதிராக, நீதிக்குப் பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் அபராதம் விதிக்க முடியும்.
03. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்துக்கு அமைவாக, குறித்த அலுவலகத்தின் உறுப்பினர்கள் 7 பேருக்கும், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கத்தேய பணத்தின் ஊடாக நடத்தப்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மேற்கத்தேய நாடுகளின் உதவியில் செயற்படும், சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றத்தில் சேவை செய்யும் உறுப்பினர்களின் நிறுவனங்களால் மட்டுமே, இந்த உறுப்பினர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துக்கொடுக்கப்படும்.
04. சட்டமூலத்தின் 21ஆவது பிரிவுக்கு அமைய, எந்தவொரு வெளிநாட்டு பிரஜை அல்லது சமூகத்திடம் பண உதவி பெற்றுக்கொள்ளும் அதிகாரம் கிடைக்கும்.
05. இந்த அலுவலகத்தின் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக, எந்தவொரு வெளிநாட்டு பிரஜை அல்லது அமைப்புடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும்.
06. இந்த அலுவலகத்தில் இலங்கையர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர் என்பது தொடர்பில், உறுதிசெய்யும் பிரிவு உள்ளடக்கப்படவில்லை.
07. காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மடடுமல்லாது எந்தவொரு வெளிநாட்டு, உள்நாட்டு நபரின் அல்லது அமைப்பின் முறைப்பாடுகளை, இந்த அலுவலகம் ஏற்றுக்கொள்ளலாம்.
08. முப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட சகலரும் இந்த காணாமல் போனோர் அலுவலகத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதுடன் அரசாங்கத்தின் இரகசிய விதிகளை பலமற்றத்தாக்கும்.
9. சட்டமூலத்தின் 12(ஏ)111 பிரிவுக்கு அமைய, சாட்சிகளை பெறும் நடவடிக்கையின்போது, 'எந்தவொரு வாக்குமூலம் அல்லது பொருட்கள் சாட்சி' என்ற ரீதியில் எடுத்துக்கொள்ள இந்த அலுவலகத்துக்கு அதிகாரம் கிடைக்கும்.
10. இந்த அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் தகவல்களைத் தெரிந்துகொள்ளும் சட்டம் வலுவற்றதாக்கப்படும். அதன் அதிகாரிகளால் பெற்றுக் கொள்ளும் இரகசியத் தகவல்கள் தொடர்பில் பரிசோதனை செய்ய, உயர் நீதிமன்றம் உள்ளிட்ட எந்தவொரு நீதிமன்றத்துக்கும் அதிகாரம் இல்லை.
20 minute ago
6 hours ago
6 hours ago
20 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
6 hours ago
6 hours ago
20 Oct 2025