Kanagaraj / 2016 மே 31 , மு.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பிலான காணிகளை இனம்காணும் செயற்பாடுகளை, 03ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் நிறைவுக்குக் கொண்டு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இடம்பெயந்துள்ள மக்களை மீளக்குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, காணி அமைச்சின் செயலாளர் ஐ.எச்.கே மஹானாம, முப்படை அதிகாரிகள், அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

50 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
56 minute ago
1 hours ago