Kanagaraj / 2016 மே 23 , பி.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
1,000 கோடி ரூபாய்க்கு நாட்டைக் காப்புறுதி செய்துள்ளமையால், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள எவருமே அஞ்சத்தேவையில்லை என்று, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தினால், பியகமவில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்றுத் திங்கட்கிழமை பார்வையிட்டதன் பின்னர் கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. நாட்டை 1,000 கோடி ரூபாய்க்குக் காப்புறுதி செய்துள்ளமையால், பாதிக்கப்பட்ட அனைவரும் அஞ்சம்கொள்ளத்தேவையில்லை.
இந்தக் காப்புறுதியின் பிரகாரம், வீடுகளை இழந்தோருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். எனினும், வாகனங்கள் மற்றும் இதர சொத்துகளுக்கு, இக்காப்புறுதியின் ஊடாக நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை வாழ் மக்களைப் பாதுகாப்பதற்காக, நாட்டையே காப்புறுதி செய்யும் வகையில், தூரநோக்குக் கொண்ட புத்தி இருந்தமை இதனூடாகப் புலப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
1 hours ago
6 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
24 Oct 2025