2021 மே 10, திங்கட்கிழமை

காலைக் கூட்டத்துக்குள் வெறிநாய்; ஐவரை விரட்டி விரட்டி கடித்தது

George   / 2016 ஜூலை 21 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு மகாவலி தேசிய பாடசாலைக்குள், நேற்றுப் புதன்கிழமை(20) காலையில் திடீரென நுழைந்த வெறிபிடித்த நாய் கடித்ததில், 5 மாணவர்கள் காயமடைந்து நீர்கொழும்பு  பிரதேச வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காலைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வகுப்பறையிலிருந்து வெளியேறிய மாணவ, மாணவிகளையே இவ்வாறு வெறிநாய் விரட்டி விரட்டி கடித்துள்ளது.

பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் நுழையும் இவ்வாறான நாய்கள் அனைவரையும் கண்டபடி கடிக்க முற்படுவதாகவும் இந்த நாய்களால் பல மாணவர்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைக்குள் நாய்கள் ஈனும் குட்டிகள் மற்றும் வெளியிலிருந்து நாய் குட்டிகள் கொண்டுவந்து பாடசாலை வளவுக்குள் விடப்படவதால் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் நாய்கள் அதிகரித்து காணப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறான கட்டாக்காலி நாய்களை முழுமையாக அப்புறப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் இதைவிட அதிக பாதிப்புகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியேற்படும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X