2021 மே 06, வியாழக்கிழமை

கொழும்பு துறைமுகத்திட்டத்துக்கு பச்சைக்கொடி

Princiya Dixci   / 2015 நவம்பர் 18 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் நிதியில் முன்னெடுக்கப்பட்டு, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்திட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறாயின் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இந்தத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் இலங்கை அரசாங்கத்தின் ஓர் உயர் அதிகாரி தெரிவித்ததாக, சீன ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இலங்கையில், சீனாவின் நிதியினாலான இந்தத் திட்டத்தை முன்னெடுப்பது குறித்து இலங்கை அரசாங்கம், சீன அரசாங்கத்துடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகவும் இதன் பின்னர், சீனாவின் திட்டத்தை இலங்கையில் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாக, குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொழும்பு நகரத்திட்டம், கடந்த மார்ச் மாதம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. குறித்த திட்டத்திலுள்ள அம்சங்களில் இத்திட்டத்தின் கட்டுமானப்பணிகள், கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .