Editorial / 2020 மார்ச் 14 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை வீதியில் களுதாவளை கிராமத்தில் இன்று (14)அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிச்சென்ற சொகுசு பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், பாதையை விட்டு விலகிய பஸ் களுதாவளை கலாசார மண்டபத்தில் மதில் மீது மோதியுள்ளது.
அவ்வழியே பயணித்துக்கொண்டிருந்த மீன் வியாபாரி ஒருவர் மீதுமம் மோதியுள்ள குறித்த பஸ் அருகிலிருந்து மின்கம்பம் ஒன்றின் மீதும் மோதியுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தில் காயமடைந்த பஸ்ஸின் சாரதி, மீன் வியாபாரி மற்றும் நடத்துனர் ஆகியோரே வைத்திசாயலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப பட்டுள்ளனர்.
குறித்த விபத்து காரணமாக களுதாவளை பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



21 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
1 hours ago