Yuganthini / 2017 ஜூலை 20 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டையிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் சேவை புரியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் இன்று (20) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் தன்னிச்சையான செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் தன்னிச்சையாக மருத்துவர்களை இடமாற்றம் செய்வதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்ட கிளையின் செயராளர் அனுர ஜெயசேகர தெரிவித்தார்.
ஆனால், நீண்டகாலமாக வைத்தியசாலையில் சேவை புரிந்த வைத்தியர்கள் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டவர்களையே இவ்வாறு வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்ததாக, ஹம்பாந்தோட்டை மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர், டொக்டர் சமல் சஞ்சிவ தெரிவித்தார்.
10 minute ago
17 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
55 minute ago