Editorial / 2017 ஜூன் 06 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
தான் பிரசவித்த சிசுவை, வைத்தியசாலையில் கைவிட்டுவிட்டு, பெண் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று, நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்க, குரணை பிரதேசத்தில் வசிக்கும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் எஸ்.பி. குமுதுனி (வயது 39) என்ற பெண்ணே இவ்வாறு குழந்தையை பிரசவித்து, அதனை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கடந்த மே மாதம் 29ஆம் திகதி, வைத்தியசாலையின் 10ஆம் இலக்க வார்டில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் அன்றைய தினம் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
இவ்வாறு குழந்தையை பிரசவித்த பெண், கடந்த 2ஆம் திகதி காலை 6.30 மணியளவில் தனது குழந்தையை வார்ட்டில் உள்ள கட்டிலில் வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .