2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

சட்டத்தரணியை கைதுசெய்ய முயற்சி

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசா்ந்த்

புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த இளம்பெண் சட்டத்தரணியொருவர், யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்ய முயற்சிக்கப்பட்டதில் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகளில் முன்னிலையாகுவதற்காக இளம்பெண் சட்டத்தரணியொருவர், இன்று காலை நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தார். அவரது சேலையில் புத்தரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது.

அதனை அவதானித்த நீதிமன்ற பொலிஸார், யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவித்தனர்.

அதையடுத்து, யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்த வந்த பொலிஸ் அணியொன்று, குறித்த சட்டத்தரணி நீதிமன்றை விட்டு வெளியேறிய போது, கைதுசெய்ய முயற்சித்தது. 

இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சம்பவ இடத்தில் ஏனைய சட்டத்தரணிகளும் கூடி  கைதுசெய்ய முயற்சித்தமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையடுத்து, பொலிஸார் குறித்த சட்டத்தரணியை, பொலிஸ் நிலையம் வந்து வாக்கு மூலம் தருமாறு கோரி, அழைத்துச் சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .