2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

’சைட்டம் போன்று 10 வேண்டும்’

Editorial   / 2017 ஜூலை 21 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

சைட்டம் போன்று, இலங்கையில் பத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் உருவாக வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.  

வடமாகாண சபை, கடந்த மூன்று வருடங்கள் 9 மாத காலப்பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு, இன்று (21) நடைபெற்றது. இதன் போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

'வடமாகாணத்தில் மருத்துவர்கள் தட்டுப்பாடாக உள்ளனர். தீவகப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு, வைத்தியர்கள் சுழற்சி முறையில் சென்று வருகின்றார்கள். கிழமைக்கு ஒரு நாள் மாத்திரமே ஒரு வைத்தியசாலைக்குச் செல்கின்றார்கள். அந்த வைத்தியசாலையை சூழ உள்ளவர்கள் தீடிரென சுகவீனம் அடைந்த அந்த வைத்தியர் வைத்தியசாலைக்கு வரும் நாள் வரை சுகவீனத்துடன் காத்திருக்க வேண்டிய அவல நிலை காணப்படுகின்றது.

'போரினால் பாதிகப்பட்டவர்களுக்கு, உளவள மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டிய தேவையுள்ளது. இந்த சிகிச்சையை தமிழ்மொழி தெரியாத சிங்கள மருத்துவர்களால் மேற்கொள்ள முடியாது. தமிழ் பேசும் வைத்தியர்களே வேண்டும். அதற்கு வைத்தியர்கள் போதாது. எனவே, அதற்காக இந்தியாவில் இருந்து மருத்துவர்களை அழைத்து, சிகிச்சை வழங்க முடியும்.

'முன்னைய காலப் பகுதிகளில், இந்தியாவில் இருந்து வைத்தியர்களை வரவழைத்தால், றோ ஊடுருவி விடும், புலனாய்வாளர்கள் வந்து விடுவார்கள் என்று காரணம் சொன்னார்கள். இப்போது என்ன பிரச்சனை? அவர்கள் இங்கே வந்து தான் தகவல்களை திரட்ட வேண்டியே தேவை இல்லை. எனவே, இந்திய வைத்தியர்களை அழைக்க வேண்டும்.

'அதேவேளை, இன்றைக்கு சைட்டத்திற்கு எதிராக போராடுகின்றார்கள். எல்லா துறைகளிலும் தனியார் கல்வி முறை ஊடாக இலங்கையில் கற்க முடியும். ஆனால், மருத்துவம் கற்கக்கூடாது என்கிறார்கள்.
 
'இதனையே, பணம் உள்ளவன் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ கற்கையை கற்று வந்து, இலங்கையில் ஒரு பரீட்சை எழுதி மருத்துவர் ஆக முடியும் என்றால், ஏன் இலங்கையில் மருத்துவ கற்கையை கற்று மருத்துவர் ஆகக் கூடாது என, போராட்டம் செய்கின்றார்கள்.

'சைட்டம் போன்று இலங்கையில் பத்து தனியார் மருத்துவ கல்லூரிகள் உருவாகினால் தான் மருத்துவர்களுக்கான பற்றகுறைகள் நீங்கும்' எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .