2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சட்டத்தை கவிழ்க்க வேண்டும்: நிமல்

Gavitha   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உரிமை பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் உள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமாயின் இந்நாட்டு சட்டத்தை தலைகீழாக கவிழ்க்கவேண்டும் என்று அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பிலான அறிக்கை குறித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு, கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்காவுக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பார்க்கின்றபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது இருந்ததைவிடவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் குறைவாக இருக்கின்றது.

எனினும், மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை நிறைவேற்றவேண்டுமாயின் இந்நாட்டின் சட்டத்தை அப்படியே தலைகீழாக திருப்பவேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .