2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

சுனாமியால் வீடுகளை இழந்த கல்முனை மக்களுக்கு இன்று வீடுகள் கையளிப்பு

Super User   / 2010 ஜூன் 21 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குள் சுனாமியால் வீடுகளை இழந்த மக்களுக்கென கட்டப்பட்ட வீடுகளில் 100 வீடுகள் மக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டதாக  அங்கிருந்து தமிழ்மிரர் இணையதளத்திற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மாவட்ட அரச அதிபரின் பணிப்புரைக்கமைய மேலதிக மாவட்ட அரச அதிபர் தர்சினி பிரசாந்த் தலைமையிலான குழுவொன்று கல்முனைக்கு வந்து இவ்வீடுகளை உரிய பயனாளிகளுக்கு கையளித்துள்ளனர்.

இதேவேளை, மிகுதியாக கல்முனை இரவெளிக்கண்டத்தில் உள்ள வீடுகளை இக்குழுவின் மேற்பார்வையின் கீழ் நாளை வழங்கப்படவுள்ளது.

எனினும், சுனாமியால பாதிக்கப்பட்ட மக்களுக்காக கல்முனை இரவெளிக்கண்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு, இதுவரைக்கும் மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் வழங்கப்படவில்லை என அங்குள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது சம்பந்தமாக கல்முனை பிரதேச செயலாளர் ஏ.எம். நெளபலுடன் தமிழ்மிரர் இணையதளம் தொடர்பு கொண்டு வினவிய போது, இரவெளிக்கண்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கான மின்சாரம் மற்றும் நீர் வசதிகளை ஒரு மாதத்திற்குள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக  கட்டப்பட்ட வீடுகள்  வழங்கப்படாததை கண்டித்து கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--