2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

‘சூனியம் செய்தவரை நாட்டுக்கே தெரியும்’

Editorial   / 2017 ஜூன் 15 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலின் போது, பொது வேட்பாளராக நான் களமிறங்கியதிலிருந்து, பல்வேறான தாக்குதல்களை மேற்கொண்டு, தனக்கு சவால் விடுத்தோர், அவை நிறைவேறாமையால், சூனியம் செய்துள்ளனர். அவ்வாறு சூனியம் செய்தவரை நாட்டுக்கே தெரியும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  

கெப்பத்தி கொல்லாவையில், தனக்கு சூனியம் செய்துள்ளதாக, தேசிய பத்திரிகைகளில் வெளியான செய்தியை பார்த்து, சிரிப்புதான் வந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறானவை மூலம், தான் இன்னுமின்னும் பலமடைவேனே தவிர, எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பலமடைவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் 38 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகக் கட்டடத்தொகுதியைத் திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று (14) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X