2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

சபையில் அமைச்சர் மேர்வின் ஒழுங்கீனம்; வெளியேற்றுவதாக சபாநாயகர் எச்சரிக்கை

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் சபை ஒழுங்கை மீறும் வகையில் செயற்படும் பட்சத்தில் அமர்விலிருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்தார்.

இராணுவத்தின் "நமக்காக நாம்" செயற்திட்டத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்துக்காக இராணுவத்தினரின் சம்பளத்திலிருந்து மாதத்திற்கு 4,500 ரூபா அறவிடப்படவுள்ளதா? என்று ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆளும் கட்சியிடம் கேள்வி எழுப்பினார்.

இருப்பினும் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஸ் குணவர்தன பதிலளிப்பதற்கு முன்னர் இடையில் குறுக்கிட்ட பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா, கூச்சலிட்டு சபையை குழப்பினார். 

இந்நிலையிலேயே அமைச்சர் மேர்வினுக்கு சபாநாயகரான சமல் ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்தார்.

  Comments - 0

  • xlntgson Thursday, 01 July 2010 09:05 PM

    சமல், ஜனாதிபதியின் சகோதரர் மட்டுமல்ல முன்னாள் பொலீஸ் அதிகாரியும் கூட, முன்னாள் சபாநாயகரைப்போல் கெஞ்சிக்கொண்டு இருக்கமாட்டார், ஆனால் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட கேள்வி ஒன்றுக்கு இவர் பதில் கூற எழுந்தது ஏன்? இபோலகமையில் இலவசமாக இராணுவ வீரர்களுக்கு கொடுத்த வீடுகளுக்கு நடத்துச்செலவு கேட்கக்கூடாது என்ற handhunettiyin கேள்விக்கு இவர் என்ன கூறிவிடமுடியும்? கேள்விக்கு பதில் தெரியும் என்று வேறு ஓர் அமைச்சர் பதில் கூறுவதை அனுமதிப்பது தவறு என்பதை சபாநாயகர் செய்திருக்கிறார் எல்லாத் தரப்பிலும் கையொலி!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--