2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

சீபா உடன்படிக்கை;இலங்கை ஜனாதிபதி-இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை

Super User   / 2010 ஜூன் 02 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீபா உடன்படிக்கை தொடர்பில் எதிர்வரும் வாரமளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது.

இந்த வருட இறுதியில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருப்பதாகவும்  வர்த்தகத்துறை பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

தற்போதைய காலகட்டத்தில் சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால், அது இலங்கைக்கு சாதகமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் பிரதானமாக இலங்கையிலுள்ள வர்த்தகர்களுடனும், அனைத்துப் பங்குதாரர்களுடனும் ஜனாதிபதி  பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் நியோமல் பெரேரா குறிப்பிட்டார்.

வர்த்தக சமூகம், முதலீட்டாளர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கு சிறந்ததொரு சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--