2021 மார்ச் 01, திங்கட்கிழமை

சமாதான நீதவான்களுக்கு ஒழுக்க நெறிக் கோவை

Editorial   / 2017 ஜூலை 20 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்ஷன் இராமானுஜன்

சமாதான நீதவான்களை சேவையிலிருந்து இடைநிறுத்தல், சேவையை இரத்துச் செய்தல் மற்றும் நிறுத்துதல் போன்ற அம்சங்களை உள்ளடக்கி, ஒழுக்க நெறிக் கோவையொன்றினை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.  

அதற்காக, 1978ஆம் ஆண்டு 02ஆம் இலக்க நீதிமன்ற கட்டமைப்பு சட்டத்தினை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.  

நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி, அமைச்சரவைப் பத்திரத்தில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

தற்போது நியமிக்கப்பட்டுள்ள சமாதான நீதவான்கள், தாம் நியமனங்களை பெறும் போது வசித்த பிரதேச செயலாளர் பிரிவுக்கு உரிய நிர்வாக மாவட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ளார் என கருத வேண்டும்.  

​அத்துடன், சமாதான நீதவான்களுக்கான ஒழுக்க நெறிக் கோவையொன்றினை செயற்படுத்தும் நோக்கில் அவர்களின் சேவையினை இடைநிறுத்தல், இரத்து செய்தல் மற்றும் நிறுத்துதல் போன்ற அம்சங்களை உள்ளடக்கி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த சட்டம் திருத்தப்படவுள்ளது.  

அதற்காக, சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பிலும், அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .