2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

சமன் வகாராச்சி கொழும்பில் காலமானார்

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரேஷ்ட ஊடகவியலாளர் சமன் வகாராச்சி கொழும்பில் இன்று(15) காலமானார். இலங்கை பத்திரிகையாளர் சங்க முக்கியஸ்தரான இவர், கடந்த நல்லாட்டசி அரசாங்கத்தின்போது லேக்ஹவுஸ் நிறுவன ஆசிரியர் பீட பணிப்பாளராக பணியாற்றிய இவர் சிலகாலம் அமெரிக்காவில் வாழ்ந்தது வந்தவராவார். 

ஊடகவியலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட கடந்த காலத்தில் அரசாங்கத்தினால்  ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் போது குரல் கொடுத்தவர்களில் ஒருவராவார். 

அன்னாரது பூதவுடல் பொரளை ஜயரத்ன மலர்சாலையில் நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17)ஆகிய நாட்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

பின்னர், புதன்கிழமை (18) அன்னாரது சொந்த ஊரான கேகாலையில் இறுதி கிரியை நடைபெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X