2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

சோமாலிய கடற்கொள்ளையர் விடுவித்த இலங்கையர் அதிகாரிகளுடன் சந்திப்பு

Super User   / 2010 மே 12 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட நிலையில் நேற்று விடுவிக்கப்பட்ட 20 இலங்கையர்களும் ஓமானிலுள்ள இலங்கை அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர்களுக்கான அனைத்து வசதிகளும் அந்நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தினால் செய்துகொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த மார்ச் 23ஆம் திகதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த மேற்படி கப்பலில் 20 இலங்கையர்கள் உட்பட 22பேர் பயணித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த கடற்கொள்ளையர்களால் கேட்கப்பட்டிருந்த பணம் கொடுக்கப்பட்டதை அடுத்து கப்பலையும் கப்பலில் இருந்தவர்களையும் கடற்கொள்ளையர்கள் விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .