2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

சிறுத்தை கொல்லப்பட்ட விவகாரத்தில் நால்வர் கைது

Editorial   / 2020 ஜனவரி 06 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடவலவ தேசிய பூங்காவை அண்மித்த பகுதியில் சிறுத்தையொன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உடவலவ நெலும்வெவ பகுதியில் வசித்து வரும் சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தையின் உடலத்தில், கால் நகங்கள், பற்கள் என்பவை கழற்றி எடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று (06) எம்பிலிபிடிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .