Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஜூலை 19 , பி.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்ரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் பிரதேசவாத செயற்பாடுகளுக்கெதிராக, கிளிநொச்சி டிப்போச் சந்தியில், இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பூநகரி, பளை, கண்டாவளை, கரைச்சி பிரதேசங்களைச் சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், போலித்தேசியம் பேசாதே, புலிகளை வைத்துப் பிழைக்காதே, சமூக வேறுபாடுகளை உருவாக்காதே, சமூக உறவைக் குலைக்காதே, சிறிதரனின் கைகளில் நிர்வாகமா, மன்னிக்கோம் மறக்கோம், எங்கள் மக்களை இழிவு செய்வதை ஏற்கோம், மலையக மக்களிடம் மன்னிப்புக் கேள், வடக்கத்தையான் என்று சொன்னதை வாபஸ் வாங்கு, வரலாற்றுத் தவறுக்கு வருந்தித் தலைவணங்கு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனா்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்துத்தெரிவிக்கையில், சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, இந்த அநீதியை முழுமையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுடன் என்றும் இணைந்திருக்கும் என்பதை உறுதி கூறுகிறது” என்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago