2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

சிறுமி மீது தாக்குதல்; பொறுப்பதிகாரிகள் இருவர் இடைநிறுத்தம்

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிக்கவெரடிய மற்றும் கொட்டவெஹெர பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட  சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரிகள் இருவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

13 வயது சிறுமி பாரதூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளிக்கொண்டுவரப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுமி தாக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த பொறுப்பதிகாரிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

நிக்கவரெட்டிய பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் உபுல சந்தன அபேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த இரண்டு பொறுப்பதிகாரிகள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மேலதிக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தாக்குதல் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட சிறுமியின் தந்தை, சிறிய தாய் மற்றும் சிறிய தாயின் சகோதரி ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .