Kogilavani / 2017 மே 31 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள் புனரமைத்துக் கொள்வதற்கான செவன நிதியத்துக்கு நன்கொடை வழங்குமாறு, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, நன்கொடையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவருடைய அமைச்சினால் அனுப்பப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, “தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பான சரியான தகவல்களைச் சேகரித்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட வீடுகளை மீள் புனரமைக்கத் தேவையான திட்டமிடல் தொகையை அளவிடும் பணி, அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்த மீள் புனரமைக்கும் பணிக்கு அரச பங்களிப்புடன் நன்கொடையாளர்களின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச எதிர்பார்க்கின்றார்.
இந்த நற்பணிக்கு பங்களிப்பை மேற்கொள்ள விரும்புவோர் அல்லது நன்கொடை நிறுவனங்கள், மக்கள் வங்கியின் இல - 204100140003931 கணக்கில் வைப்பிலிட முடியும் என, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அறிவிக்கிறது.
தம்மால் முடிந்தளவு பணத்தை நன்கொடையாக வைப்பிலிட முடியும் என்பதுடன் அந்த தொகைக்கு 100% வருமான வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் (நிதி) அவர்களுடன் 071-8047526 தொலைபேசி ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்” என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 minute ago
8 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
13 minute ago