2021 ஜனவரி 16, சனிக்கிழமை

சு.க ஆதரவாளர் தன்மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக யாழ் மேயர் குற்றச்சாட்டு

Super User   / 2010 ஏப்ரல் 01 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமநாதன் அங்கயன் குழுவினரே தம்மீது தாக்குதல் நடத்தியதாக யாழ் மாநகரசபை மேயர் பற்குணராஜா ஜோகேஸ்வரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ் மாநகரசபையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில்  தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கான வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்புகையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.

ராமநாதன் அங்கயன் குழுவினர் தன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கும் அதேவேளை,  தனது கணவர் மற்றும் வாகன சாரதி ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் பற்குணராஜா ஜோகேஸ்வரி குறிப்பிட்டார்.

இதன்போது, தனது வாகனக் கண்ணாடிகள் அடித்து சேதமாக்கப்பட்டதாகவும் யாழ் மாநகரசபை மேயர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தாக்குதல் நடத்திய குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறிய பற்குணராஜா ஜோகேஸ்வரி, ராமநாதன் அங்கயனுக்கு சொந்தமான வாகனமொன்று தாக்குதல்ச்  சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலையடுத்து, சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அறிவித்திருந்ததாகவும்  யாழ் மாநகரசபை மேயர் பற்குணராஜா ஜோகேஸ்வரி குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .