2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சிகிரியாவில் 18 பேர் மீது குளவி கொட்டு

Niroshini   / 2016 ஜூலை 17 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிகிரியாவை பார்வையிடச் சென்ற கலாசார முக்கோண வலய பாதுகாப்பு அதிகாரி உட்பட 18 சுற்றுலா பயணிகள் குளவி கொட்டுக்கிலக்காகி கிம்புஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதில் 12 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளடங்குவதாகவும் அதில் 6 ஆண்களும் 4 பெண்களும் இந்திய பிரஜை ஒருவரும் ஜேர்மன் நாட்டு பிரஜை ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூர் சுற்றுலா பயணிகளில் மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த ஐவரும் உள்ளடங்குவதாக சிகீரியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் காயமடைந்தவர்களில் இரு வெளிநாட்டுசுற்றுலா பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .