Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோ சனைக்கான செயலணியின் அறிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், புதன்கிழமையன்று கையளிப்பதற்கு அந்தச் செயலணி தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினமே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அவ்வறிக்கை கையளிக்கப்பட உள்ளது. கலந்தாலோசனைக்கான செயலணியின் அறிக்கையானது, ஜனாதிபதி, பிரதமரிடமும் கடந்த நவம்பர் மாத இறுதியிலேயே கையளிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரிடமும் ஏககாலத்தில், அறிக்கையைக் கையளிப்பதற்கான பொருத்தமான நேரத்தைப் பெறமுடியாமை, அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் என்பவற்றால், திட்டமிட்ட நேரத்தில், அறிக்கையைக் கையளிக்க முடியவில்லை.
ஜனாதிபதி, பிரதமரிடம் அறிக்கை கையளிக்கப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 27ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் மாநாடொன்றும் நடத்தப்படவுள்ளது.
உண்மை மற்றும் நீதியைக் கண்டறிதல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல், அதற்கான இழப்பீடுகளைப் பெறுவதற்கு வழிவகைசெய்தல் போன்ற நல்லிணக்கப் பொறிமுறைகள் மற்றும் வழிவகைககள் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக நல்லிணக்கப் பொறிமுறைகள் குறித்த கலந்தாலோசனைச் செயலணி 2016 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
3 hours ago
3 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
8 hours ago
8 hours ago