2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

சீரற்ற வானிலை: ஸ்தம்பித்தது கொழும்பு

Princiya Dixci   / 2017 மே 18 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், வெசாக் தோரணங்களும் விழுந்துள்ளமையினால், போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பலத்த காற்று மற்றும் மழையால் மரமொன்று முறிந்து விழுந்ததில், கொழும்பு - லோடஸ் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு - டெலிக்கொம் மத்திய நிலையத்துக்கு அருகில், மருதானை டாலி வீதியின் தீயணைப்புப் பிரிவுக்கு அருகில், புறக்கோட்டை - ட்ரக்டர் கூட்டுத்தாபன சந்தி போன்ற பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

இதேவேளை, கடும் மழையின் காரணமாக, கிரிபத்கொடையில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரணமொன்று  சரிந்து விழுந்துள்ளது.

குறித்த வெசாக் தோரணம் இடிந்து விழுந்ததில் 4 வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளன.

சீரற்ற வானிலை தென்படுவதாதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .