2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

சிறுமிக்கு சிறுநீர்கொடுத்து துன்புறுத்தியவர் கைது

Kanagaraj   / 2016 மார்ச் 21 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

15 வயதான சிறுமியை அடிமையாக வைத்து, அவரைத் தாக்கி, அவருக்கு பலவந்தமாக மது மற்றும் சிறுநீரை பருகக்கொடுத்து, வன்கொடுமைகளுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 21 வயதான ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம், மாத்தறை மாவட்டத்தில் திக்வெல்ல பொலிஸ் பிரிவிலேயே இடம்பெற்றுள்ளது. அவர் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த சிறுமியை அவ்விளைஞன், கடந்த மூன்று மாதங்களாக இவ்வாறு, அடிமையாக வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தி வந்துள்ளார். அவ்விளைஞனிடமிருந்து தப்பிவந்த அச்சிறுமி, பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே அவ்விளைஞனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, சிறுமியை தாக்குவதற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் குண்டாந்தடி மற்றும் இரும்பு கம்பிகளையும் அவ்வீட்டிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவ்விளைஞனை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X